முகப்புகோலிவுட்

மாதவனின் ‘மாறா’ பட லேட்டஸ்ட் அப்டேட்..!

  | January 10, 2020 14:11 IST
Maara

மாதவன் நடிக்கும் ‘மாறா’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

மாதவன் நடிக்கும் ‘மாறா' திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

‘விக்ரம் வேதா' திரைப்படத்திற்குப் பிறகு மாதவன் நடிக்கும் திரைப்படம் ‘மாறா'. இப்படம், மலையாளத்தில் துல்கர் சல்மான் - பார்வதி நடிப்பில், மார்டின் ப்ரக்கத் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘சார்லி' திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்குகிறார். பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு கேமர வேலைகளை தீபக் பகவான் கவனிக்க, புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.
விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீண்டும் இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாகிறார். மேலும், யூடியூபில் மியூசிக்கல் ஸ்டாண்ட அப் காமெடியன் அலெக்சாண்டர் பாபு இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பில் கவனம் செலுத்திவரும் ‘மாறா' படத்திலிருந்து தற்போது புதிய அப்டேட் தெரியவந்துள்ளது. ‘நெடுஞ்சாலை' மற்றும் ‘அதே கண்கள்' படங்களில் நடித்த ஷிவதா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர் மாதவன் இதற்கிடையில், ‘ராக்கெட்ரி' திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படும் இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும், அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து ‘நிசப்தம்' திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்