முகப்புகோலிவுட்

பிரசன்னா-சினேகாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா..?

  | February 13, 2020 18:03 IST
Prasanna

நட்சத்திர தம்பதியான பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.

நட்சத்திர தம்பதியான பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.

நடிகர்களான பிரசன்னா மற்றும் சினேகாவிற்கு 2012-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த நட்சத்திர தம்பதிக்கு விஹான் எனும் மகன் உள்ளார். ஆரம்பத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த இருவரும் தற்போது, நல்ல நல்ல கதாப்பாத்திரங்களில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி, இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண்பிள்ளை பிறந்தது. அதனை, பிரசன்னாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் “தை மகள் பிறந்தாள்” என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தற்போது, அந்த குழந்தைக்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் தெரியவந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘ஆத்யந்தா' என பெயர் சூட்டியுள்ளனர். இந்த பெயர் குறித்து நடிகர் பிர்சன்னா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தாங்கள் முதல் குழந்தை பெண் குழந்தையாக் இருக்கும் என எதிர்ப்பார்த்து ‘ஆத்யா' என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தாகவும் கூறிய அவர், தற்போது இண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு அதே பெயரை சற்று வித்தியாசமாக மாற்றி ஆத்யந்தா என வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் பிரசன்னா துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வெளியா துப்பரிவாளன், திருட்டுப் பயலே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அவர் தற்போது, மாஃபியா, துப்பரிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், நடிகை சினேகா தனுஷுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பட்டாஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரின் ‘அடிமுறை' சண்டை காட்சிகள் நல்ல பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. மேலும், அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவர்களாக கலந்துகொண்டு வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com