முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படம் வெளியாக இடைக்கால தடை ‼

  | November 15, 2019 12:14 IST
Sivakarthikeya

துனுக்குகள்

 • இந்த வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி
 • கே.ஜே.ஆர் நிறுவனம் 'ஹீரோ' தயாரித்தார்
 • டிசம்பர் 20ம் தேதி வெளியிட 24 பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை டிசம்பர் 20ம் தேதி வெளியிட 24 பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.
 
இந்நிலையில் 24பிலிம்ஸ் நிறுவனம் டி.எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ. 10 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும். ஒப்பந்தபடி கடன் தொகை ரூ. 10 கோடியை 24 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்கவும் கோரி வழக்கு தொடர்ந்தனர்.
 
இதனை விசாரித்த நீதிபதி 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதே சமயம் கே.ஜே.ஆர் நிறுவனம் 'ஹீரோ' படத்தை தாங்கள் தயாரித்து வருவதாகவும். இது குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com