முகப்புகோலிவுட்

வெங்கட் பிரபுவின் “மாநாடு” படத்தில் இருந்து சிம்பு அதிரடி நீக்கம்!

  | August 08, 2019 12:58 IST
Maanadu

துனுக்குகள்

  • மாநாடு படத்தில் இருந்து சிம்பு திடீர் நீக்கம்
  • மாநாடு படத்திற்கு வேறு கதாநாயகன் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்
  • வெங்கட் பிரபு மாநாடு படத்தை இயக்குவார் என அறிவிப்பு
Maanaadu Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு (Simbhu) நடிக்கவிருந்த மாநாடு படம் இன்னும் தொடங்கப்படாமல் காலதாமதம் ஆவதால் இந்த படத்தில் இருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
“வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.
 
தன்னை வைத்து மாநாடு (Maanaadu) படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.
 
அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் (STR) அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!”
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்