முகப்புகோலிவுட்

மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு!

  | June 17, 2019 14:13 IST
Str

துனுக்குகள்

  • மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார்
  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்
  • கௌதம் கார்த்தி நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
இந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து தற்போது, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இப்படத்தை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 23ல் தொடங்கும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.  
 
இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
 
கன்னடத்தில் உருவான 'மப்டி' படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்