முகப்புகோலிவுட்

சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வசூல் எவ்வளவு தெரியுமா…..?

  | February 06, 2019 12:40 IST
Vantha Rajavathaan Varuven

துனுக்குகள்

  • சுந்தர் சி இப்படத்தை இயக்கினார்
  • இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்திருந்தார்
  • மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா இருவர் இப்படத்தில் நடித்திருந்தனர்
இந்த ஆண்டு திரைத்துறைக்கு நல்ல வேட்டை என்றே சொல்லலாம்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினியின் பேட்ட, மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
அதைத் தொடர்ந்து கடந்த வாரம், சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்', ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்', மம்முட்டி நடித்த ‘பேரன்பு', கடல் படத்தில் அறிமுகமான சரண் நடித்த ‘சகா' போன்ற படங்கள் வெளியாகின.
 
இந்த நான்கு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தன, இதில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியான மூன்று நாளில் 1,கோடியே 35 லட்சம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த மதிப்பீடு சென்னையில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்ற படங்களான சர்வம் தாளமயம், பேரன்பு, சகா திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. விமர்சனங்களை தொடர்ந்து இந்த படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் இன்னும் நிறைய தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் அஜித் படங்களிலே அதிக வசூலை எடுத்த படம் என்கிற சாதனையும் இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்