முகப்புகோலிவுட்

கார்த்தி பட படப்பிடிப்பில் இந்து முன்னணியினர் போராட்டாம்! வெளியேறிய படக்குழு!

  | September 25, 2019 17:08 IST
Karthi

துனுக்குகள்

 • கிரிவலம் நடத்த அனுமதி மறுத்ததைத் தொடர்ந்த இந்த போராட்டம் நடைபெற்றது
 • படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தம்
 • கார்த்தியின் கைதி படம் தீபாவளி அன்று வெளியாகிறது
‘மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ்(Logesh Ganagaraj) கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கைதி' படத்தை அடுத்து நடிகர் கார்த்தி(karthi) நடித்து வரும் படம் ‘சுல்தான்'.
 
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த மலைக்கோட்டையில் சிவனடியார்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் சமீபத்தில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத போது படப்பிடிப்பிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மலைக்கோட்டையில் இருந்து படக் குழுவினர் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
கார்த்தி நடித்துள்ள ‘கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்துடன் விஜய்யின் பிகில் திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com