முகப்புகோலிவுட்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் பாடல் ஆசிரியர் பிரான்சிஸ் கிருபா..!

  | May 15, 2019 12:25 IST
Studio Green

துனுக்குகள்

  • பிரபல எழுத்தாளர் இவர்
  • சம்மனசுக்காடு நூலுக்கு சுஜாதா விரு பெற்ற கவிஞர் இவர்
  • திரைப்படங்களில் பாடலாசிரியராக இருந்தவர்
சமீபத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு துடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை காப்பாற்ற முயன்ற எழுத்தாளர் ஒருவரை, கொலையாளி என்று சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தியது.
 
வலிப்பு வந்து இறந்தவரின் உடற்கூறு ஆய்வு வந்தபிறகு எழுத்தாளர் எந்த தவறும் செய்யவில்லை. அந்த இளைஞர் இயற்கையாகத்தான் இறந்தார் என்று காவல்துறை அவரை விடுதலை செய்தது.
 
யாரும் உதவ முன்வராத நிலையில் எனக்கென என்று இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற நினைத்த அந்த எழுத்தாளருக்கு நடந்த கொடுஞ்சம்பவம் மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரையும் கேள்விக்கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
 
மனிதத்தின் மீது பேரன்பு கொண்ட அந்த எழுத்தாளரின் பெயர் பிரான்சிஸ் கிருபா. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்,  மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். கன்னி என்கிற புதினத்தை எழுதியவர். இவர் சுந்தரராமசாமி விருதும், சம்மனசுக்காடு நூலுக்கு கடந்த 2017ம் ஆண்டு சுஜாதா விரு பெற்றவர். திரைப்படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

ஆற்றல் மிக்க இந்த படைப்பாளியை வறுமை சூழ இச்சமூகம் இவரை மறந்து விட்டது. அதுவே இவரை இந்நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திரைப்படத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இயங்கி வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரான்சிஸ் கிருபாவிற்கு நடந்த இத்தகைய சூழலை உணர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,
 
ஒரு பெரும் தடையை  பிரான்சிஸ் கிருபா தாண்டி வந்திருகிறார். அவருடைய வாழ்கை போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது. இது போன்ற கலைஞர்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோம். அதைப் போலவே எங்களுடைய அடுத்த தயாரிப்பில் பிரான்சிஸ் கிருபா பணியாற்றுவார் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரான்சிஸ் கிருபா  தன் பணியை எவ்வித தடைகளும் இன்றி, முன்பை விடவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது" என்று கூறியிருக்கிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்