முகப்புகோலிவுட்

"நகல் இல்லா அசல் கண்மணியே..!!" - பாராட்டிய அனிரூத், நன்றி சொன்ன அருண்ராஜா காமராஜ்

  | May 29, 2020 12:05 IST
Anirudh

துனுக்குகள்

 • பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து சின்னத்திரையில்
 • தன்னுடைய 'கன்னக்குழி அழகே' என்ற இசை ஆல்பத்தை அவரே
 • அருண்ராஜா காமராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து சின்னத்திரையில் கலக்கியவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைக்கொண்டு விளங்கும் அருண்ராஜா காமராஜ். ‘ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த அருண்ராஜா, சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி' படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா' பாடலை எழுதி மற்றும் பாடி உலகளவில் பரிட்சயமானார். கடந்த 2018ம் ஆண்டு வெளியான, ‘கனா' படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

தற்போது, இந்த கொரோனா லாக்டவுனுக்கு இடையில், தன்னுடைய 'கன்னக்குழி அழகே' என்ற இசை ஆல்பத்தை அவரே இயக்கி பாடல்வரிகளையும் எழுதியுள்ளார். கணேசன் சேகர் இசை அமைக்க, பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் பாடலை பாடியுள்ளார்.

இப்பாடலின் லிரிக் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அருண்ராஜா காமராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்விட்டர் வழியாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com