முகப்புகோலிவுட்

'தளபதி 64' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்? அதுவும் விஜய்சேதுபதிக்காக!

  | October 10, 2019 10:25 IST
Vijay

துனுக்குகள்

  • சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது
  • இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார்
  • மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
விஜய் சேதுபதிக்காக சில மாற்றங்களை செய்துள்ளது தளபதி64 படக்குழு என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
 
அட்லியின் ‘பிகில்' படத்தை அடுத்து நடிகர் விஜய் ‘மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தளபதி64 என தற்காலிக பெயருடன் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கவிருக்கிறார். மேலும் மாளவிகா மேனன், ஆண்டனி வர்கீஸ், உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.  
இப்படத்தில் விஜய் சேதுபதிக்காக படக்குழு நிறைய மாற்றங்கள் செய்துள்ளனராம். அதாவது, ஏற்கனவே விஜய்சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆண்டிற்கு அதிக படங்களை நடிக்கும் கதாநாயகன் என்றால் அது விஜய்சேதுபதிதான் என யோசிக்காமல் சொல்லக்கூடிய அளவிற்கு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறர் விஜய்சேதுபதி. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களில் நடிக்கவிருப்பதால் இந்த படத்தில் அவரது காட்சிகளை முதலில் முடித்து மற்ற பட வேலைகளில் அவர் கவனம் செலுத்த உதவியுள்ளனர். அதோடு இதற்கு முன் அவர் கமிட் செய்த படங்களுக்காக அவரது லுக்கும் மாறாமல் இருக்க மிகவும் கவனமாக தளபதி 64 படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்களாம். மேலும், விஜய்யும் அவரது காட்சிகளை முதலில் முடிக்க ஓகே கூறியுள்ளாராம். 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்