முகப்புகோலிவுட்

'அவர் ட்விட்டர் தளத்தில் இல்லை..!!' - பிரபல பெண் இயக்குநருக்காக ட்வீட் செய்த வேதிகா..

  | May 29, 2020 15:24 IST
Sudha Kongara

துனுக்குகள்

 • 2010ம் ஆண்டு பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில்
 • 2013ம் ஆண்டு ஒரு விளையாட்டு சம்மந்தமான திரைப்படத்தை உருவாக்க
 • இந்த தகவலை பிரபல நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில்
2010ம் ஆண்டு பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் தான் துரோகி. பிரபல பெண் படைப்பாளி சுதா கொங்கராவின் முதல் படம் இதுவே. சுதா சுமார் ஏழு ஆண்டுகளாக பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள Women's Christian கல்லூரியில் பயின்ற இவர் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டு ஒரு விளையாட்டு சம்பந்தமான திரைப்படத்தை உருவாக்க எண்ணி இவர் உருவாக்கி திரைப்படம் தான் 'இறுதிச் சுற்று'. அதே ஆண்டே பிரபல நடிகர் மாதவனிடம் இந்த கதையை கூற சுமார் மூன்று ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு 2016ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த படம் தான் 'இறுதிச் சுற்று'. அதன் பிறகு ஹிந்தியில் Saala Khadoos மற்றும் தெலுங்கில் குரு ஆகிய பெயர்களில் இந்த படம் வெளியாகி அங்கும் அளவில் வரவேற்பை பெற்றது.     

இந்நிலையில் வரும் ஜூன் 22ம் தேதி ஒரு சிறப்பான அப்டேட் ஒன்று அறிவிக்கப்படும் என்று நேற்று சுபா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாக தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் அது போல எந்த பதிவும் இடவில்லை. தனக்கு ட்விட்டர் கணக்கு உள்பட எந்த சமூகவலைத்தள கணக்கும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை பிரபல நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com