முகப்புகோலிவுட்

சுதா கொங்கராவுடன் கவுதம் மேனன் உள்ளிட்ட 3 இயக்குநர்கள் இணையும் புதிய திரைப்படம்.?

  | July 03, 2020 23:27 IST
Sudha Kongara

இந்த படத்தில் பவானி ஶ்ரீ மைய கதாபாத்திரமாக நடிக்க, சாந்தனு பாக்யராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்.

மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச் சுற்று' படத்தின் மூலம் தனக்கென ஒரு தனிப் பெயரைப் பெற்றவர் இயக்குநர் சுதா கொங்கரா. அப்படத்தால், அவரை நோக்கி அனைத்து சிறந்த நடிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் தற்போது, சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று' திரைப்படத்தை இயக்கி, அதன் வெளியீட்டிற்கான வேலைகளில் செயல்பட்டு வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பைக் கொண்ட இந்த படத்தில், மோகன் பாபு, ஜாக்கி ஷிராஃப், பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு இயல்புநிலை திரும்பியவுடன் இப்படத்தின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படம் விவரங்கள் வெளிவந்துள்ளன, இது நெட்ஃப்ளிக்ஸ் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இதில் சில பகுதிகளுக்கு கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் இயக்குநர்களாக உள்ளனர். கவுரவக் கொலை குறித்த இந்த படத்தின் நான்கு பகுதிகளாக தலா அரை மணி நேரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ மைய கதாபாத்திரமாக நடிக்க, காளிதாஸ் ஜெயராம் அவரது காதலராகவும், சாந்தனு பாக்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். முழு கதையும் கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த படத்தின் நான்கு பகுதிகளும் தொடர்ச்சிகளாக நெட்ஃப்ளிக்ஸில் பொதுவான தலைப்பில் ஒளிபரப்பப்படவுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com