முகப்புகோலிவுட்

விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் யார்..? ‘தளபதி65’ செம அப்டேட்..!

  | February 13, 2020 13:38 IST
Vijay

துனுக்குகள்

 • விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
 • 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளிட திட்டமிடப்பட்டுள்ளது.
 • 'தளபதி 65' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படம் குறித்த முக்கிய தகவகல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், அஞுன் தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். ஏப்ரல் 9-ஆம் தேது வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் நாளை காதலர் தினத்தன்று வெளியாகிறது. ‘ஒரு குட்டி கதை' எனும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியாப் செய்தியை ‘தளபதி' ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், தற்போது விஜயின் அடுத்த படமான ‘தளபதி65' திரைப்படத்தின் தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது என்பது முன்னதாகவே உறுதியாகிவிட்டது. ஆனால், என்ன கதை, யார் இயக்குவது, என்ன பட்ஜென் என எந்த தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்தில், விஜயின் அடுத்த படத்தை வெற்றிமாறன் அல்லது மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இருவருமே வெவ்வேறு படங்களில் கமிட்டாகிவிட்டனர். அதையடுத்து, இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜா இருமருமே விஜயிடம் கதை சொல்லிருக்க, இருவரின் கதையுமே அவருக்கு பிடித்துள்ளது. ஆனால், சன் பிகசர்ஸ் மிக பிரம்மாண்டமான படைப்பை எதிர்பார்க்கும் நிலையில், இவர்களின் கதை சிறிய பட்ஜட்டிலேயே முடிந்துவிடக்கூடியாக இருக்கிறதாம்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தற்போது ‘இறுதிச் சுற்று' மற்றும் ‘சூரரைப் போற்று' பட இயக்குனர் சுதா கொங்கராவிடம் கதை கேட்டுள்ளதாகவும், அந்த கதையில் தான் ‘தளபதி65' தயாராகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சூரரைப் போற்று படத்தில் சுதாவுடனும், பல படங்களில் விஜயுடனும் பணிபுறிந்துள்ள ஜி.வி. பிரகாஷ் தான் இப்படத்துக்கும் இசையமைக்க அதிக ப்வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com