முகப்புகோலிவுட்

“சுஜித்தின் மரணம் வேதனை அளிக்கிறது”- நடிகர் ரஜினிகாந்த்!

  | October 29, 2019 16:29 IST
Sujith

துனுக்குகள்

  • சுஜித் மரணம் ரஜினிகாந்த் ட்வீட்
  • நடிகர்கள் பலரும் சுஜித்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
  • சுஜித் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவன் சுஜித்தின் மரணத்திற்கு நடிகர் ரஜீனிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
 
கடந்த 25ம் நாள் திருச்சி மனப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடந்தது.
 
மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு, என இன்னும் 8க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாளாக நடந்த மீட்பு பணி இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. பல மணிநேரம் போராடியும் அந்த இரண்டு வயது சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை.
 
சுஜித்தின் உயிரற்ற உடலை மட்மே மீட்பு குழுவினரால் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாவட்டத்தையும் பாதிப்படைய செய்துள்ளது. பல்வேறு தரப்பினர். சுஜித்தின் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்து சுஜித்தின் குடும்பத்தினருக்கு ஆருதல் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.  
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்