முகப்புகோலிவுட்

‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.! வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

  | May 12, 2020 19:50 IST
Rajinikanth

சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் இப்படம் மூன்றாவது படைப்பாகும்.

‘தர்பார்' திரைப்படத்தையடுத்து ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 168-வது திரைப்படமாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' 2021 பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தலைப்புடன் ஒரு சிறிய வீடியோவாக பின்னணி இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட புட்டுதலுக்கு முன்னர், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள பகுதிகள் இயல்புநிலை திரும்பியவுடன் படமாக்கப்படவுள்ளது. மேலும், பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டதால், ஏழு மாத காலக்கெடுவுடன் அனைத்து வேலைகளையும் படக்குழு முடிக்க திட்டமிட்டுள்ளது.

'அண்ணாத்த' படத்தில் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவை கையாளுகிறார். சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் இப்படம் மூன்றாவது படைப்பாகும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com