முகப்புகோலிவுட்

‘தலைவர்168’ செம அப்டேட்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

  | November 28, 2019 19:30 IST
Rajini

துனுக்குகள்

  • தலைவர் 168 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
  • இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார்.
  • இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168' திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார்.

தர்பார் திரைப்படத்தையடுத்து சூப்பெர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படத்துக்கு ‘தலைவர் 168' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘பேட்ட' திரைப்படத்துக்குப் போட்டியாக வெளிவந்த ‘விஸ்வாசம்' திரைப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தான் இப்படத்தை இயக்குகிறார். மேலும், இப்படத்தை ரஜினியின் எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளதாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் நடிகை குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் ‘பரோட்டா' சூரி இப்படத்தில் இணைந்துள்ளார். இந்தத் தகவலை சன் பிக்சர்ஸ் நிருவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை ரஜினி ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்