முகப்புகோலிவுட்

செம வைரலாகும் ரஜினியின் டப்பிங் வீடியோ..! சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்...

  | November 26, 2019 13:10 IST
Thalaivar

துனுக்குகள்

 • ரஜினியின் தர்பார் திரைப்படம் வரும் ஜனவர்-9 வெளியாகிறது
 • இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
 • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸின் எந்திரன் திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் பேசிய டப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தர்பார் திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இப்படத்தில் ‘ஆதித்யா அருணாசலம்' எனும் பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ரஜினி, அவரின் டப்பிங் வேலைகளை சமீபத்தில் முடித்தார். 2020 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா யோகிபாபு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நிவேதா தாமஸ் ஸ்ரீமன் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ரஜினியின் இன்ட்ரோ பாடலான ‘சும்மா கிழி' என தலைப்பிடப்பட்டுள்ள முதல் சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படமான ‘தலைவர் 168' திரைப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், ‘எந்திரன்' படத்துக்காக சிட்டி ரோபோவின் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய ரஜினியின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில் “எந்திரன் திரைப்படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மரண மாஸ் டப்பிங் அமர்வை பார்த்து ரசியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ரஜினிகாந்த் அசத்தலாக டப்பிங் செய்யும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com