முகப்புகோலிவுட்

4-வது முறையாக இணையும் ‘ஆக்‌ஷன்’ கூட்டணி..!

  | March 31, 2020 17:39 IST
Vishal

இதற்கிடையில், முத்தையா இயக்கும் அடுத்த படத்திலும் விஷால் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுந்தர்.சி தற்போது, ஆர்யா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை-3 படத்தை இயக்கிவருறார். அதேபோல், நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் எம்.எஸ் ஆனந்த் இயக்கத்தில் ‘சக்ரா' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, மனோ பாலா, ஸ்ருஷ்தி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக தயாராகிவருகிறது. அதைத் தொடர்ந்து, துப்பறிவாளன்-2 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விஷால்.

விஷாலுக்கு கடைசியாக சுந்தர்.சி இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. முன்னதாக விஷால்-சுந்தர் சி கூட்டணியில் மதகஜ ராஜா, ஆம்பல ஆகிய படங்கள் வெற்றிகரமாக அமைந்தது. ஆனால், ‘ஆக்‌ஷன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக இணைவதற்கு திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர்.சி, அரண்மனை-3 பட வேலைகளையும், விஷால், துப்பறிவாளன்-2 இயக்கத்தையும் முடித்த பிறகு இப்படம் துவங்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையில், முத்தையா இயக்கும் அடுத்த படத்திலும் விஷால் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com