முகப்புகோலிவுட்

'அப்போ இந்த தடவ 'Set-டு' போடலையா..?' - வெளியான அரண்மனை அப்டேட் ?

  | February 24, 2020 12:24 IST
Aranmanai 3

1995ம் ஆண்டு வெளியான முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவர் அறிமுகமானார்

துனுக்குகள்

 • முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவர் அறிமுகமானார்
 • 'அப்போ இந்த தடவ 'Set-டு' போடலையா..?'
 • வெளியான அரண்மனை அப்டேட் ?
எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுக்கான தனி பாணி உண்டு. இயக்குநர் சுந்தர் சி-யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 1995ம் ஆண்டு வெளியான முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவர் அறிமுகமானார். அதே ஆண்டு நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமான முறை மாப்பிள்ளை படம் தான் இவரின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர் என்று பல ஹிட் படங்களைக் கொடுத்த சசுந்தர் சி அண்மைக்காலமாக அரண்மனை என்ற திகில் படத்தை எடுத்து வருகின்றார். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கவுள்ளது என்ற அறிவிப்பு வந்தது. நாயகனாக ஆர்யா அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியானது. 

இந்நிலையில், இந்த அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளதாகவும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் உள்ள ஒரு அரண்மனையில் படமாக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகிய உள்ளதாக சினிமா வட்டார செய்திகள் கூறுகின்றன.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com