முகப்புகோலிவுட்

'வெற்றிக்குறியோடு வெறித்தனமான ஒர்க் அவுட்' - சந்தனத்தை மிஸ் பண்ணும் ஆர்யா..!!

  | July 05, 2020 10:36 IST
Arya

துனுக்குகள்

 • கேரளாவில் பிறந்து சென்னையில் பொறியியல் பயின்று, அதன் பிறகு மென்பொருள்
 • இந்த ஊரடங்கு இவருடைய தினசரி ஒர்க் அவுட்டை தற்காலிகமாக நிறுத்திய
 • சந்தனத்துடன் இணைந்து செய்வதுபோல வெற்றிக்குறியையும்
கேரளாவில் பிறந்து சென்னையில் பொறியியல் பயின்று, அதன் பிறகு மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் நடிகர் ஆர்யா. அதன் பிறகு 2005ம் ஆண்டு வெளியான 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் வழியாக திரையுலகில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே Film Fare வழங்கும் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் வெளியான முதல் படம் 'அறிந்தும் அறியாமலும்' என்றபோதும் அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமானது உள்ளம் கேட்குமே என்ற படம் தான். இந்த படம் 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2005ம் ஆண்டு வெளியானது, இதில் பிரபல நடிகை அசின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை தனது இயல்பான நடிப்பால் பல ரசிகர்களை கவரும் ஆர்யா ஒரு Fitness Freak என்பது பலரும் அறிந்ததே. ரசிகர்கள் தங்கள் செய்யும் ஒர்கவுட்களை அவரிடம் இணையத்தில் பகிர்ந்தால் அவர்கள் அனைவரையும் இவர் பாராட்ட மறந்ததில்லை. அதனாலேயே இவரை டார்லிங் என்று அழைக்கும் ரசிகர்கள் பலர்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு இவருடைய தினசரி ஒர்க் அவுட்டை தற்காலிகமாக நிறுத்திய நிலையில் அண்மைகாலமாக மீண்டும் அதை தொடங்கியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனது நண்பருடன் ஜாகிங் சென்று வந்த புகைப்படத்தை வெளியிட்டு பாஸ் என்கிற பாஸ் படத்தில் சந்தனத்துடன் இணைந்து செய்வதுபோல வெற்றிக்குறியையும் செய்துள்ளார். பின்னர் சந்தானத்தை மிகவும் மிஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com