முகப்புகோலிவுட்

லாக்டவுனில் குடும்பத்தோடு அமெரிக்கா பறந்த சன்னி லியோன்.! இன்ஸ்டாவில் விளக்கம்.!

  | May 13, 2020 10:41 IST
Sunny Leone

"எங்கள் குழந்தைகளை இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளிடமிருந்து பாதுகாக்க"

நடிகை சன்னி லியோனுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம். ஹிந்தி, தமிழ், கன்னட உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். அவர் தற்போது தமிழில் ‘வீரமாதேவி' திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அவர் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் மற்றும் அவரது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகிறார். இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபரான சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் சன்னி திடீரென இந்தியாவை விட்டு வெளியேறி தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுவிட்டார், இப்போது அவர் அதற்கான காரணத்தை ஒரு பதிவில் மனம் திறந்துள்ளார்.

சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அங்குள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நீங்கள் குழந்தைகளைப் பெறும்போது உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நல்வாழ்வு பின்னுக்குச் சென்றுவிடும். டேனியல் வெப்பர் மற்றும் நான் எங்கள் குழந்தைகளை, இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளி 'கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம் என்று நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் இருக்கிறோம். இதை தான் நான் செய்யவேண்டுமென என் அம்மா விரும்பியிருப்பார் என்று எனக்கு தெரியும். மிஸ் யூ அம்மா. மகிழ்ச்சியான அன்னையர் தின வாழ்த்துக்கள்!" எனப் பதிவிட்டிருந்தார்.

போக்குவரத்து வசதி இல்லாதபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு இந்த பூட்டுதலில் அமெரிக்காவிற்கு வந்தார்கள் என்று ஒரு ரசிகர் டேனியல் வெபரிடம் கேட்டுள்ளார், அதற்கு அவர் KLM விமானத்தில் அரசாங்கத்தின் மூலம் வந்ததாகக் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com