முகப்புகோலிவுட்

வணக்கம், அனைவரும் நலமா..? - இனிதே ட்விட்டரில் இணைந்த பிரபல நடிகர் "பட்டாபி"..!

  | August 10, 2020 10:14 IST
M.s.baskar

துனுக்குகள்

 • சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் இந்த வெள்ளித்திரையில் ஜொலித்து வருவது நாம
 • 1987ம் ஆண்டு வெளியான "திருமதி ஒரு வெகுமதி" என்ற படத்தின் மூலம் இவர்
 • இவர் மொழிகளை கையாள்வதில் அசகாய சூரன் என்றே கூறலாம்
சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் இந்த வெள்ளித்திரையில் ஜொலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்று சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வெள்ளித்திரை பிரவேசம் அடைந்து இன்றளவும் தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருபவர்தான் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய சகோதரி ஹேமாமாலினி ஒரு மிகச்சிறந்த டப்பிங் கலைஞர் என்பது நாம் அறிந்ததே. 

1987ம் ஆண்டு வெளியான "திருமதி ஒரு வெகுமதி" என்ற படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானாலும் சிறுவயது முதலே இவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் என் பக்கம், காவலன் அவன் கோவலன், வேடிக்கை என் வாடிக்கை போன்ற படங்களில் சிறு சிறு வேதங்கள் ஏற்று நடித்த இவர் அதன் பிறகு பல சின்னத்திரை நாடகங்களில் நடிக்க தொடங்கினர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நாடகத்தில் காதில் ஒரு கையை வைத்துக்கொண்டு பட்டாபியாக வளம் வந்த இவரை எந்த 90s கிட்-ம் மறக்கமுடியாது. 

ஏறத்தாழ 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2001ம் ஆண்டு வெளியான கோட்டை மாரியம்மன் என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் திரையுலக பிரவேசம் பூண்டார். அன்று தொடங்கிய அந்த பயணம் பல வெற்றி படங்களை தாண்டி இன்றும் தொடர்கிறது. நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என்ற பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் இவர் மொழிகளை கையாள்வதில் அசகாய சூரன் என்றே கூறலாம். சூப்பர் ஸ்டார், உலக நாயகன் தொடங்கி இவர் ஜோடிபோட்டு நடிக்காத பிரபலங்கள் இல்லை என்றாலும் அது மிகையல்ல. 33 ஆண்டுகளாக திரையுலகில் கலக்கி வரும் எம்.எஸ்.பாஸ்கர் தற்போது ட்விட்டர் தளத்தில் இணைந்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com