முகப்புகோலிவுட்

பொங்கலுக்கு மோதும் சூப்பர் ஸ்டாரும் இளைய சூப்பர் ஸ்டாரும்?

  | November 02, 2019 17:39 IST
Rajnikanth

துனுக்குகள்

  • வரும் பெங்கல் அன்று ரஜினியின் தர்பார் படம் வெளியாக உள்ளது
  • தனஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக தகவல்
  • பட்டாஸ் படத்தை துரைசெந்தில் குமார் இயக்கி உள்ளார்
இந்த ஆண்டு பொங்கல் அன்று ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகளை திருவிழாவாக்கியது. திரைத்துறைக்கு இந்த ஆண்டு நல்ல தொடக்கமாகவும் அமைந்தது.
 
 
சமீபத்தில் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய திரைப்படங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. விமர்சன ரீதியாக பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக 200கோடிக்கும் மேல் வசூல் சாதனை நிகழ்த்தி திரையரங்குகளை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று அதிக திரையரங்குகளை பெற்று வருகிறது.
 
 
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கொடி பட இயக்குநர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பட்டாஸ்' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் முறையா சூப்பர் ஸ்டார் படமும், இளய சூப்பர் ஸ்டார் படமும் ஒரே நாளில் வெளியாவது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்