முகப்புகோலிவுட்

'சூப்பர் ஸ்டார் கொடுத்த 50 லட்சம்' - மகிழ்ச்சியில் FEFSI ஊழியர்கள்

  | March 24, 2020 13:10 IST
Rajini

துனுக்குகள்

  • தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன
  • சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சம்
  • வேலையின்றி வாடி வரும் FEFSI உறுப்பினர்களுக்கு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவுமாறு FEFSI தலைவர் ஆர்.கே.சல்வமணி நேற்று, நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட சகோதரத்துவத்திடம் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்குப் பிறகு சில மணிநேரங்களில், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கினர். அதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனும் FEFSI உறுப்பினர்களின் நலனுக்காக ரூ .10 லட்சம் நன்கொடை அளித்தார். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அடுத்தபடியாக தற்போது வேலையின்றி வாடி வரும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் சுமார் 50 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை PRO ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சார்பில் சுமார் 150 அரிசி முட்டைகளை அந்த ஊழியர்களுக்காகத் தந்திருப்பதாகவும் திரு. ஜான்சன் கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com