முகப்புகோலிவுட்

ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.!

  | August 08, 2020 19:50 IST
Chinni Jayanth

ஸ்ருஜன் ஆட்சிப் பணியில் ஈடுபடும்போது கல்வி, வர்த்தகம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்தவதில் விருப்பம் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்

80 மற்றும் 90 களில் ஏராளமான திரைப்படங்களில் கல்லூரி மாணவனாக, நண்பனாக மற்றும் குணச்சித்திரம் என பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சின்னி ஜெயந்த். அவரது மகன் ஸ்ருஜன் ஜெய் சமீபத்தில் ஐ.ஏ.எஸ் 2019 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், அகில இந்திய தரவரிசையில் 74வது இடத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக சகோதரத்துவம் அவரது சாதனையைப் பாராட்டியுள்ள நிலையில், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஸ்ருஜன் ஜெயை  அழைத்து அவரது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சின்னி ஜெயந்த் திரைப்படத் துறையில்  தனது குருவாக கருதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட அவரது நெருங்கிய நண்பர்கள் அனைவரிடமும், இந்த நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்த ரஜினிகாந்த், சின்னி ஜெயந்தின் மகன் தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஆட்சிப் பணியில் ஈடுபடும்போது கல்வி, வர்த்தகம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதில் விருப்பம் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com