முகப்புகோலிவுட்

தொலைக்காட்சியில் புதிய சாதனை படைத்த சூப்பர் ஸ்டார்..!

  | April 03, 2020 12:37 IST
Super Star Rajinikanth

ரஜினிகாந்த் நடித்த “இண்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்” நிகழ்ச்சி 1.2 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நான்கு தசாப்தங்களாக தனது மறுக்கமுடியாத பாக்ஸ் ஆபிஸ் பதிவுகள் மற்றும் வெற்றி விகிதத்துடன் திரைத்துறையை ஆளுகிறார். இப்போது அவர் தொலைக்காட்சியிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் பியர் கிரில்ஸுடன் "இன்டூ தி வைல்ட்" நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி அறிமுகமானார், இது மார்ச் 23 அன்று மாலை 8.30 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இப்போது இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய டிஆர்பி (TRP rating) பதிவுகளை உருவாக்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த “இண்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்” நிகழ்ச்சி 1.2 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது, இது முந்தைய 4 வார எபிசோடுகளுடன் ஒப்பிடும்போது பார்வையாளர்களின் விகிதம் 86% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்கவரி சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 5 மடங்கு அதிகரித்துள்ளது, மெலும் டிஸ்கவரி தமிழ் சேனலின் பார்வையாளர்கள் 20 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience research council) தெரிவித்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com