முகப்புகோலிவுட்

Man vs Wild-ல் ரஜினிகாந்த்..!!

  | January 28, 2020 11:42 IST
Rajinikanth

பேர் க்ரில்ஸ் இயக்கும் மேன் vs வைல்டு டாக்குமெண்டரியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேர் க்ரில்ஸ் இயக்கும் மேன் vs வைல்டு டாக்குமெண்டரியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கர்நாடகா மாநிலம் பண்டிபுரா வனப்பகுதியில் உள்ளதாகவும். அவர் பிரபல Man vs Wild புகழ் பேர் கிரில்ஸுடன் இணைந்து வனப்பகுதியில் ஆவணப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் ‘wild life with PM Narendra Modi' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அது உலகம் முழுக்க மிகவும் பிரபலமானது. அதற்கும் முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர்களான மைக்கேல் பி. ஜார்டன், ஸாக் எஃப்ரான், பென் ஸ்டெல்லர் உள்ளிட்ட பலர் இது போன்ற வைல்டு லைஃப் நிகழ்ச்சியில் பேர் கிரில்ஸுடன் பங்குபெற்றுள்ளனர்.
அந்த அவ்ரிசையில் தற்போது, உலக புகழ்பெற்ற தமிழ் பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த டாக்குமெண்டரியில் பங்குபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஜனவரி 27-ஆம் தேதி) துவங்கப்பட்டதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்கு ரஜினிகாந்த் அந்த ஷூட்டிங்கில் தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தை மும்பையைச் சார்ந்த Seventaurus Entertainment தயாரிப்பதாகவும் அறியப்படுகிறது.

இது தொடர்பான ஆவணத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் பறவிவருகிறது. இத்தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இப்படி ஒரு ஆவணப்படம் எடுப்பது உறுதியானால், உலகமெங்கும் உள்ள ரஜினிரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்