முகப்புகோலிவுட்

'நீங்கள் இல்லாமல் நான் இல்லை' - வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்..!

  | August 10, 2020 13:50 IST
45 Years Of Rajinism

துனுக்குகள்

  • இளம் வயதில் முளைத்த சினிமா ஆசையால் மேடை நாடகங்களில்
  • ஆரம்ப காலத்தில் பல சறுக்கல் வர, இயக்குநர் சிகரம் என்ற மாமனிதரின் பார்வை
  • நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
'சிவாஜி ராவ் கேக்வாட், இவர் பெங்களூரு நகரில் 1950ம் ஆண்டு பிறந்த ஒரு சாமானியன். இளம் வயதில் முளைத்த சினிமா ஆசையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனது படிப்பை முடித்த அந்த சிவாஜி ராவ் அப்போது தனக்கு கிடைத்த வேலைகளை செய்துவர, ஒரு காலகட்டத்தில் பேருந்து நடத்துநராக தனது காலத்தை கடத்தினார். அன்றைய மதராஸ் நகரம் நோக்கி தனது கலை பயணத்தை மேற்கொண்டார், மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தனது நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார் சிவாஜி ராவ். 

ஆரம்ப காலத்தில் பல சறுக்கல் வர, இயக்குநர் சிகரம் என்ற மாமனிதரின் பார்வை இவர் மேல் விழுந்தது. இவர் நடிப்பை பார்த்த பாலச்சந்தர் நீ ஜொலிக்கும் நட்சத்திரத்தை போல மின்னப்போகிறாய் என்று கூறி 'ரஜினிகாந்த்' என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு 1975ம் ஆண்டு வெளியானது 'அபூர்வ ராகம்' என்ற திரைப்படம். 1975 தொடங்கி 1980-க்குள் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் அன்போடு இவரை தலைவர் என்று அழைக்க சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு தமிழ் திரையுலகின் முடிசூடிய மன்னனாக விளங்குகிறார். 

தற்போது இந்திய திரையுலகில் தனது 45வது ஆண்டை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி." என்று கூறி #நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com