முகப்புகோலிவுட்

நான்கு மொழிகளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் !

  | November 05, 2019 17:34 IST
Super Star

துனுக்குகள்

  • பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு
  • வரும் 7ம்தேதி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது
  • காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் ரஜினி நடித்துள்ளார்
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்துள்ள திரைப்படம் " தர்பார் ".(Darbar) சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்க யோகி பாபு(Yogibabu) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நீண்ட அண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர்.
 
"தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்