முகப்புகோலிவுட்

'என்னை முழு நடிகனாகிய என் குரு' - அய்யா KB-யை அவர் பிறந்தநாளில் நினைவுகூர்ந்த சூப்பர் ஸ்டார்..!!

  | July 09, 2020 17:54 IST
Kb90

துனுக்குகள்

 • 1964ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான தெய்வ தாய்
 • நாகேஷ், சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான நீர் குமிழி என்ற
 • 2006ம் ஆண்டு வெளியான பொய் என்ற திரைப்படமே இவர் இறுதியாக எழுதி
தஞ்சை தரணிக்கு அடுத்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் நந்நீலம் என்ற இடத்தில் 9 ஜூலை 1930 ஆண்டு பிறந்தவர் தான், தமிழ் திரையுலகிற்கு உலக நாயகனையும், சூப்பர் ஸ்டார் என்னும் மாபெரும் நடிகரையும் இன்னும் பல எண்ணற்ற சிறந்த நடிகர்களையும் கொடுத்தவர். இயக்குநர் சிகரம் என்று பலரும் போற்றிப்புகழும் அந்த மாமேதை 1964ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான தெய்வ தாய் என்ற திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகினர். 

நாகேஷ், சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான நீர் குமிழி என்ற திரைப்படமே இவர் இயக்கம் மற்றும் எழுத்தில் வெளியான முதல் திரைப்படம். தனக்கென தனி பணியில் இந்த சிகரம் இயக்கிய படங்கள் காலம்கடந்து இன்றளவும் பேசப்படுகிறது. 'ஒளிரும் நட்சத்திரம்' என்ற பொருள்படும் ரஜினிகாந்த் என்ற பெயரை சிவாஜி ராவுக்கு சூட்டியது இவரே. கமல், விவேக், சார்லி என்று காலம் கடந்து இன்றளவும் பிரபலமாக உள்ள நடிகர்களின் குரு இவரே என்பது குறிப்பிடத்தக்கது. 

2006ம் ஆண்டு வெளியான பொய் என்ற திரைப்படமே இவர் இறுதியாக எழுதி இயக்கிய படம், 2015ம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் எழுத்தில் உருவான உத்தம வில்லன் என்ற திரைப்படமே இவர் இறுதியாக நடித்த திரைப்படம். காலம்கடந்து போற்றப்படும் இந்த மாமேதை கடந்த 2014ம் ஆண்டு இயற்கை எய்தினார். இன்று அவருடைய 90வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நேரத்தில் அவருடைய சீடரும் நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தனது குருவை பற்றி தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com