முகப்புகோலிவுட்

வெளியான 7 நாட்களில் ரஜினியின் ‘2.0’ செய்த சாதனை

  | December 06, 2018 16:02 IST
Rajinikanth 2.0

துனுக்குகள்

 • கடந்த நவம்பர் 29-ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் ‘2.0’
 • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
 • இப்படம் ரிலீஸாகி 7 நாட்களே ஆகியுள்ளது
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி 3D தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0'. ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இதனை ஷங்கர் இயக்கியிருந்தார். ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
 
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்து ரசித்த திரையுலக பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர். இப்படம் ரிலீஸாகி 7 நாட்களே ஆகியுள்ளது. இந்நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.500 கோடி கல்லா கட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com