முகப்புகோலிவுட்

ரசிகர்கள் கொண்டாடும் #HBDSuperstarRajinikanth..! பிரபலங்கள் வாழ்த்து..!

  | December 12, 2019 11:38 IST
Rajini168

துனுக்குகள்

 • சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிறந்தார்.
 • அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 • தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 168வது படத்தில் நடிக்வுள்ளார்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

சாதாரன குடும்பத்தில் சிவாஜி ராவ் கைக்வாதாக பிறந்து, கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து, பின் 1975-ல் இயக்குனர் சிகரம் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் துணை கதாப்பாதிரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான ரஜினிகாத்த், தனது சொந்த முயற்சியாலும், கடும் உழைப்பாலும் மிகுந்த உயரத்திற்கு சென்று, 'Super Star' என்ற பட்டத்துடன் உலகமறிய கொடி கட்டி பறந்துவரும் அவர்  இன்று (12-12-2019) தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168' திரைப்படத்தின் துவக்க பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், நேற்று மாலையே படக்குழுவுடன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
அதையடுத்து பல்வேறு திரைப் பிரபலங்களும், பிரமுகர்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் இணையத்தில் அவருக்கு இணையதள பக்கங்களில் வாழ்த்து தெறிவித்துவருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com