முகப்புகோலிவுட்

கலைஞர்களுக்காக 'ஒரு குரலாய்' இ-கான்செர்ட் - வாழ்த்துக்களை தெரிவித்த 'சூப்பர் ஸ்டார்'..!

  | September 12, 2020 11:27 IST
Oru Kuralaai

துனுக்குகள்

 • அண்மை காலமாக தமிழகத்தில் கொரோனா வேகம் சற்று அதிகரித்து உள்ளது
 • இன்று மாலை வெளியாக இருக்கும் இந்த இ-கான்செர்ட்டினை பல பாடகர்கள்
 • தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அண்மை காலமாக தமிழகத்தில் கொரோனா வேகம் சற்று அதிகரித்து உள்ளது என்றே கூறலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 57,15,216 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பல நாட்களாக 5000-க்கும் அதிக அளவில் கொரோனா எண்ணிக்கை உள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த கொரோனா பரவல் காரணமாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சினிமா துறையில் வேலை இழந்து வாடும் பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு உதவும் வகையில் தற்போது இ-கான்செர்ட் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளனர். பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்களின் எழுத்தில் இந்த பாடல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்று மாலை வெளியாக இருக்கும் இந்த இ-கான்செர்ட்டினை பல பாடகர்கள் ஒன்றிணைந்து பாடவுள்ளனர். "ஒரு குரலாய்" என்ற இந்த பாடலை பாட இந்த கான்செர்ட்டில் தற்போது இணைந்துள்ளார் பிரபல இசையமைப்பாளரும் பாடகரமான டி.இமான் அவர்கள். மேலும் இந்த நிகழ்விற்கு தற்போது தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com