முகப்புகோலிவுட்

நடிகை விஜயலக்ஷ்மிக்கு உதவி செய்த ரஜினி! வைரலாகும் வீடியோ!!

  | August 10, 2019 18:25 IST
Superstar

துனுக்குகள்

  • ஃபிரண்ட்ஸ் படத்தில் இவர் நடித்திருந்தார்
  • ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் இவர்
  • உதவி வேண்டி வெயிட்ட வீடியோவை பார்த்து ரஜினி உதவி செய்துள்ளார்
விஜய், சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி.
 
இவர் தமிழில் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக நடித்தார். தற்போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


 
இவர் தற்போது பண கஷ்டத்தில் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று வீடியோ வெளியிட்டார். ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் வீடியோவில் கூறியிருந்தார். இப்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி பேசி இருப்பதாவது:-
 
“வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்
 
அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.
 
ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.” என்றிருக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்