முகப்புகோலிவுட்

தமிழக முதல்வரை திருமணத்திற்கு அழைத்த சூப்பர் ஸ்டார்... புகைப்படம் இதோ

  | February 11, 2019 13:04 IST
Rajinikanth

துனுக்குகள்

  • செளந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று திருமணம்.
  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பிதழ் அளித்துள்ளார்.
  • நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதன் பொருட்டு ரஜினிகாந்த் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் பிஸியாக இருந்தார்.  இவர்களின் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் முக்கிய விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு தளத்திலிருந்து தாமதமாகவே வந்து தனுஷ் கலந்து கொண்டார்.
 
இந்நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார். இதற்கான புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் உள்ளதா என்று பலரும் ஆர்வமாக கமெண்டியபடி உள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்