முகப்புகோலிவுட்

“தலைவர் வேற லெவல்” தர்பார் படப்பிடிப்பிலிருந்து கசியும் புகைப்படங்கள்

  | April 26, 2019 13:14 IST
Rajinikanth

துனுக்குகள்

  • ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்
  • இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது
பேட்ட படத்தை தொடர்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் சிலரால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 
oh5upvg

நேற்று முன்தினம் படப்பிடிப்பில் நயன்தாரா பங்குபெற்றார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் இப்படத்தில் நடிக்க  யோகி பாபு முக்கிய கதாபாத்திரம் வகிப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
 
o9v29pvg
 
முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கூடும் ரசிகர்கள் சிலர் காட்சியாக்கப்படும் படப்பிடிப்பை செல்போன்களில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி வெளியிடப்படும் வீடியோவும், புகைப்படங்களும் வைராலாகி வருவதையும் பார்க்க முடிகிறது.
 
d8vtquu8
 
தற்போது மும்பையில் நடக்கும் தர்பார் படப்பிடிப்பில் இருந்து ரசிகர் யாரோ ஒருவர் ரஜினி, நிவேதா தாமஸ், யோகி பாபு மூன்று பேறும் நடிக்கும் காட்சி ஒன்றை படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 
a2ebke6g

இதில் மூன்று பேரும் மருத்துவமனையில் இருப்பது போன்றும் யோகி பாபுவின் ஆடையை பார்க்கம் போது ரஜினியின் உதவியாளர் போலவும் தெரிகிறது.
 
agsp28fg

ஏற்கனவே படம் முழுவதும் ரஜினியோடு இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகின தற்போது இந்த புகைப்படங்கள் அதை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


 
 
 

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்