முகப்புகோலிவுட்

என்கவுண்டர் சிறப்பு அதிகாரியாக ரஜினி...!

  | May 15, 2019 15:37 IST
Darbar

துனுக்குகள்

  • ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது
பேட்ட படத்தை தொடர்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பி உள்ளார்.
 
கடந்த 10-ம் தேதி துவங்கிய படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி நயன்தாரா படப்பிடிப்பில் இணைந்தார். இதையடுத்து தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியே கசிந்தது. இதனால் தற்போது படத்தில் பணியாற்றுவோருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஜதின் சர்னா தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார். அவர் ரஜினியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், ஒருசில சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  
படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது போஸ்டர் மூலம் வெளியான நிலையில் அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது.
 
படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள்.
 
படப்பிடிப்பில் ரஜினி மற்ற தொழிலாளர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் ரம்ஜான் விரதம் அனுசரிக்கப்படுவதால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இசுலாமிய பணியாளர்களுக்கு சிறப்பு இப்தார் விருந்து அளித்தும் சிறப்பித்து இருக்கிறார்.
 
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்