முகப்புகோலிவுட்

எஸ்.பி.பி பூரண குணமடைய வேண்டிக்கொள்ளும் ‘சூப்பர் ஸ்டார்’..!

  | August 18, 2020 10:20 IST
Rainikanth

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலால் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி- ரஜினிகாந்த்

கோவிட் -19 க்கு நேர்மறை பரிசோதனை செய்யப்பட்டு எஸ்.பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் தங்கள் வேண்டுதல்களையும் வாழ்த்துக்களையும்  சமூக வலைதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 71 வயதாகும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆபத்தான நிலையிலிருந்து கடந்துவிட்டார் என்று மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமடைந்து, அவருக்கு வாழ்க்கை ஆதரவு அளிக்கப்பட்டது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண் ட்விட்டரில் ஒரு சுகாதார புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் மிகவும் வசதியாக சுவாசிப்பதாக தனது வீடியோ செய்தியில் கூறிணார்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது வீடியோ பதிவில் “50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்.பி.பி அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் அப்படினு கேள்விப்பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி. அவர்கள் சீக்கிரம் குணமடையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், தனது பதிவிற்கு “கெட் வெல் சூன் டியர் பாலு சார்” என்று தலைப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகிய விருதுகளால் கவுரவிக்கப்பட்ட புகழ் பெற்ற பாடகராவார். பாலசுப்பிரமணியம் பல மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார், மேலும் அவர் நடிகராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com