முகப்புகோலிவுட்

மகள் திருமணத்தில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினி

  | February 11, 2019 15:23 IST
Soundarya Rajinikanth  Wedding

துனுக்குகள்

  • ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்
  • தொழிலதிபர் விசாகன் என்பவரை மணக்கிறார்
  • வெள்ளிக்கிழமை அன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள்,சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்வில் ரஜினி உற்சாகமாக  நடனமாடி அசத்தினார்.
 
நடிகர் ரஜனிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். விவாகரத்து பெற்ற கையோடு இரண்டாம் திருமண ஏற்பாடு அவருக்கு நடைபெற்றது.
 

 
தொழிலதிபர் விசாகன் என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ள போகிறார் என முடிவானது. இந்த நிலையில் திருமண ஏற்பாடுகளை வேகமாக ரஜினி குடும்பத்தார் செய்தனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு ரஜினி நேரில் சென்று திருமண அழைப்பிதழை வைத்தார்.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த் திருமண அழைப்பிதழை வழங்கினார். அதன் அடிப்படையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி விடைபெற்றார். 
 
இந்நிலையில் முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடிகர் ரஜினிகாந்த் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.          


மேலும் படிக்க - "செளந்தர்யா மற்றும் விசாகன் திருமணப் புகைப்படங்கள்"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்