முகப்புகோலிவுட்

“பா.ஜ.க நதிநீர் இணைப்பு திட்டத்தை செய்வார்கள்” - ரஜினி நம்பிக்கை!

  | June 29, 2019 13:56 IST
Superstar Rajinikanth

துனுக்குகள்

  • ரஜினி தர்பார் படத்தில் நடித்து வருகிறார்
  • இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்
நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்' படத்தில் நடித்துவருகிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மும்பையில் படப்பிடிப்பில் கலந்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பிய ரஜினி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
 
“குடிநீர் பிரச்சினையில் இருக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள என்னுடைய ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன்” என தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள்” என்று கூறினார்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்