முகப்புகோலிவுட்

யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்லியிருக்கிறார் ரஜினி

  | February 13, 2019 13:06 IST
Superstar Rajinikanth

துனுக்குகள்

  • சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினியின் இளைய மகள் ஆவார்
  • இவர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
  • முதல்வர், எதிர்கட்சித்தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கெண்டனர்
நேற்று ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித்தலைவர்கள் இன்னும் பல தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பெரும் புள்ளிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதில்,

என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர்,  அமைச்சர் பெருமக்கள், எதிர்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், திரு, முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், திரு. அமர்நாத், கமல்ஹாசன் திரைப்பிரபலங்கள், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்