தடம் படத்தின் வெற்றிக்கு பின் புதிய பரிணாமம் எடுத்திருக்கிறார் நடிகர் அருண் விஜய் (Arun Vijay). மகிழ் திருமேனி இயக்கிய ‘தடம்' படத்தில் வித்யா பிரதீப், தாண்யா ஹோப் உள்ளிட்ட நட்சித்திரங்கள் நடிக்க அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது.
இப்படத்தை அடுத்து தெலுங்கில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான சாஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். இப்படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா'. `துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிள் கவனத்தை ஈர்த்த கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.
இதை கவனி; கிரைம் திரில்லர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பல்லக் லால்வாணி!!!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.