முகப்புகோலிவுட்

வெளியானது ரஜினியின் '2.0' டீசர்

  | September 13, 2018 09:01 IST
2.0 Film Release

துனுக்குகள்

  • இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்
  • மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார்
  • படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ என 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 3 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் டீசரை இன்று (செப்டம்பர் 13-ஆம் தேதி) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்