முகப்புகோலிவுட்

#1yearofkaala-காலம் கடந்தும் கடந்து போக முடியாத "காலா"!

  | June 07, 2019 19:02 IST
Super Star

துனுக்குகள்

  • இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருந்தார்
  • இப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருந்தார்
  • கடந்த ஆண்டு ஜுன் 7ல் இப்படம் வெளியானது
இன்றோடு ஓர் ஆண்டு நிறைவுருகிறது, இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கி கடந்த ஆண்டு வெளியான “காலா” திரைப்படம். கபாலி திரைப்படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்த்துடன் ரஜினி இரண்டாவது முறையாக இணைந்த படம் இது.
 
பல்வேறு விமர்சனங்களை கடந்து எளிய மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இந்த படம் அமைந்திருந்தது. இன்றைய சமூகச்சுசூலில் பேச மறுக்கும், அல்லது பேச மறந்த நில மீட்புக்குறித்து இப்படம் ஆழமாக பேசியிருந்தது அரசியலிலும் ஒரு உரையாடலை நிகழ்த்தியது என்று கூறலாம்.
 
e70svoq8

 
நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் பெரும்பாண்மையான திரைப்படங்களில் எளிய மக்கள் வாழும் சேரி பகுதியையும் அந்த எளிய மனிதர்களையும் சித்தரிக்கப்பட்ட விதம் என்ன என்று பார்த்தால், ரவுடிகள், அடியாட்கள், வில்லன்கள் என பட்டியலிடலாம். இவ்வாறாகவே வெகுஜன மக்கள் பார்க்கும் சினிமாவில் சோரி வாழ் மக்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
 
bu0seqk

 
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படங்களில் இத்தகைய  மோசமான சித்தரிப்புகள் விதி விளக்கு. கொண்டாட்டம் நிறைந்த, அன்பும் பாசமும் நிறைந்த மனிதர்களாக, சமூகத்தில் பல்வேறு சிகரங்களை தொட்டு சாதிக்கும் மனிதர்களாக அவருடைய திரைப்படங்கள் உள்ளதை உள்ளபடியே பதிவு செய்து வருகிறது. எளிய மக்களின் இயல்பான வாழ்கையை சித்தரிப்புகளில் இருந்து விடுவித்து அவர்களின் உண்மை நிலையை உரக்க பேசுகிறது. அந்த அடிப்படையில் இவர் இயக்கிய காலா திரைப்படம் முக்கிய இடம் வகிக்கிறது.
 
n73ul6do

 
பொதுவாகவே பா.இரஞ்சித் இயக்கும் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து பேசவேண்டும் என்றால் ஒரு கட்டூரையே எழுதலாம்.  பல்வேறு காலகட்டங்களில் நவீன நாகரீக வளர்ச்சிகளை நோக்கி இச்சமூகம் நகர்ந்தாலும் பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டும் சினிமாசித்தரிப்புகள் இன்றளவும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இரஞ்சித் திரைப்படங்கள் அதற்கும் விதிவிளக்கு
 
it3j1pig


காலா திரைப்படத்தில் பெண்கதாபாத்திரங்களுக்கு வழங்கிய முக்கியத்துவம் என்பதிலிருந்தே நாம் அதை புரிந்துக்கொள்ள முடியும். பெண் என்பவள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பவள் அல்ல, அவளுக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. பெண் உடல் மீது திணிக்கப்பட்டிருக்கும் உடல் அரசியலை சிலமணித் துளி காட்சிகளில் உடைத்திருந்தது காலா திரைப்படம்.
 
8kiivrd8

 
 முற்போக்கு சிந்தனையில் வெளியான இப்படத்தை பலர் இது ரஜினி படம் இல்லை, இரஞ்சித் படம் என்று கூறினார்கள். ஆம் இது இரஞ்சித்தின் படம்தான் என்று வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள். தொலைவில் இருந்து கை அசைகும் ரஜினியாகவே பார்த்து வந்த ரசிகர்களுக்கு உணர்வு பூர்வமாக ரஜினியை  நெருக்கமாக்கிய திரைப்படம் என்றால் அது காலா தான்.
 
em244v6g

 
இப்படம் வெளியாகி ஓர் ஆண்டு ஆனாலும் காலா ஏற்படுத்திய தாக்கமும் உரையாடலும் கடல் அலைகளின் ஓசையைப் போல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காலம் கடந்தும் கடந்து போக முடியாதவன் “காலா”.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்