முகப்புகோலிவுட்

100 நாள் கடந்தும் களத்தில் ஓயாமல் ஓடிக்கொண்டிக்கும் ரஜினியின் “பேட்ட”

  | April 20, 2019 14:02 IST
Petta

துனுக்குகள்

 • கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்
 • அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
 • சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது
இந்த ஆண்டு தொடக்கத்திலே சினிமா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்த படம் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான  “பேட்ட”.
 
cvnfmv8o

ரஜினிக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எடுப்பாக இருக்கும். ஆனால் 80, 90 களில் ரஜினிக்கு இருந்த ஸ்டைல், மெருக்கு நீண்ட நாட்களாக சினிமாவில் பார்க்கவே முடியவில்லை என்கிற பெறும் வருத்தம் ரஜினி ரசிகர்களுக்கு இருந்தது. அதை மீண்டும் அடங்காத காளியாக இயக்குநராக இல்லாமல் ரசிகனாக இருந்து இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.
 
i7iv4gd8

 மதமறுப்பு திருமணம் செய்து கொண்ட தன் தங்கையின் குடும்பத்தையே கொல்ல நினைக்கும் அண்ணன், தங்கையின் மகனையும் கொலை செய்ய முயற்சிக்கிறான். தன் நண்பனின் மகனை பாதுகாக்கும் பெரும் பொருப்பில் காளி கதாபாத்திரத்தில் ரஜினி மிடுக்கான, ஸ்டைலான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார்.
 
mkucb71

ஹாஸ்டல்  வார்டனாக ரஜினி இப்படத்தில் பழைய காளியாக வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். காளி இவருடைய பெயர் என்றாலும் தென் தமிழகத்தில் உள்ள பேட்ட என்னும் ஊரில் அடங்கா காளையாக இருந்ததால் இவரை அனைவரும் செல்லமாக பேட்ட என்று அழைத்தனர்.
 
4nj0jap

குடும்பம்தோடும் பார்க்கும் சிறந்த குடும்பப்படமாகவும், ரஜினி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாகவும் இந்த படம் இருந்தது.
 
வசூல் ரீதியாக இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று இன்றும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 100 நாளை இப்படம் எட்டி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்த அத்தனை பாடல்களும், பின்னணி இசையும் இன்றும் ரீங்காரமாய் காதுகளில் ஒளித்துக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கம் இளைய தலைமுறைகளின் செல்பேன்களின் ரிங் டோனாக பேட்ட படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இருக்கிறது.
 
o1mcge48

இந்த படத்தில் சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் இன்னும் பலர் நடித்திருந்தனர். சிம்ரம் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்கிற மிக்ப்பெரிய கலைஞனுடன் நடிக்கவில்லை என்கிற கவலை அவருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் இருந்தது.
 
 
t0nqtqmg

இந்த படத்தில் 90களில் பார்த்த அதே இளமையோடு இந்த படத்தில் ரஜினிக்கும், சிம்ரனுக்கும் அவ்வளவு அழகாக பொருந்தியிருந்தது இவர்களின் கெமிஸ்ட்ரி…
 
 
s69ri0vg

இந்த படம் ரஜினியை, காளியாக, பாட்ஷாவாக, தளபதியாக, முத்துவாக மீண்டும் ரஜினியை ரசிகர்களுக்கு நிறுத்தியிருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com