முகப்புகோலிவுட்

ரஜினியின் இளைய மகளின் திருமண தேதி அறிவிப்பு

  | January 24, 2019 11:06 IST
Rajinikanth Daughter Soundarya

துனுக்குகள்

  • சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு திருமணம்
  • இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்
  • தற்போது தொழிலதிபர் ஒருவரை மணக்கிறார்
தமிழ்த்திரையுலகில் முடிசூடா மன்னனாக இருப்பவர் ரஜினி காந்த். இவரின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இரண்டாவது திருமணத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி முன் தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அதை தொடர்ந்து தற்போது இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 11ம் தேதி சவுந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் நடைபெறவுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்  நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். பிப்ரவரி 9ம் தேதி கடவுள் வழிபாடு நடத்தப்பட்டு, 10ம் தேதி மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு, 11ம் தேதி திருமணம் நடக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்