முகப்புகோலிவுட்

“பழிவாங்கவே இயக்குநர் பா.இரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது” இரஞ்சித்திற்கு ஆதரவாக நீதிபதி கருத்து!

  | September 10, 2019 10:47 IST
Pa Ranjith

துனுக்குகள்

 • அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தீபக் குப்தா கருத்து
 • சமீபத்தில் ராஜராஜ சோழன் குறித்து இரஞ்சித் கருத்து தெரிவித்தார்
 • இரஞ்சித் மீது ஐ.பி.சி 153 மற்றும் 153 ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது
பழிவாங்குவதற்காகவே இயக்குநர் இரஞ்சித் மீது வழக்கு தொடுக்கப்பட்டது என உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
 
 தேச துரோகச் சட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பிரேயர் பப்ளிக் அறக்கட்டளை மற்றும் விரிவுரைக் குழு நடத்திய கருத்தரங்கில் உரையாற்றினார். அப்போது பல்வேறு கருத்துகளை கூறிய அவர் இன்றைய சூழலில் தேச துரோக வழக்கு என்பது பழிவாங்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப் படுகிறது என்று வருத்தம் தெறிவித்தார். இதற்கு பல உதாரணங்களை கூறிய தீபக் குப்தா ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சுட்டிகாட்னார். அவர் தேச துரோக வழக்கு குறித்து பேசிய போது குறிப்பிட்ட சில உதாரணங்கள் இவை,

“சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்வெட்டு குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதாக தேசத்துரோக குற்றச்சாட்டில் 53 வயது நபர் கைது செய்யப்பட்டார். அப்போதைய ஆளும் அரசின் பிம்பத்தை கெடுப்பதற்காகவே இந்த வதந்தி பரப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு அபத்தமானது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
 
மணிப்பூரில், ஒரு பத்திரிகையாளர் மாநில முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பிரதமருக்கு எதிராக முற்றிலும் தகுதியற்ற பாராளுமன்ற மொழியைப் பயன்படுத்தினார். இது ஏற்றகொள்ள கூடியது அல்ல என்றாலும், இது தேசத்துரோக வழக்கு அல்ல. இது கிரிமினல் அவதூறு வழக்கு. ஆனால் அந்த நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டார்.
 
மேற்கு வங்காளத்தில், முதலமைச்சரின் உருவத்தை மார்பிங் செய்ததற்காக ஒரு கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில், நாட்டின் பிரதமரின் உருவத்தை மார்பிங் செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மார்பிங் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனிதரை திடீரென கைது செய்வதற்கான காரணம் என்ன?
 
மற்றொரு மோசமான உதாரணம், சாதி பகைமையைத் தூண்டுவதற்காகக் கூறி ஐ.பி.சி 153 மற்றும் 153 ஏ பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் ஒரு திரைப்பட இயக்குனர் (பா.ரஞ்சித்)மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏனென்றால், சோழ வம்ச மன்னர் ஒருவர் சாதி ஒடுக்குமுறையை நிகழ்த்தினார் என்று அவ்வியக்குநர் பேசியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த சோழ வம்ச மன்னன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com