முகப்புகோலிவுட்

வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா ஹீரோவா நடிப்பேன் - மனம் திறந்த யானை ஜோக் கதிர்

  | May 05, 2020 08:35 IST
Actor Kathir

துனுக்குகள்

 • எனக்கு விஜய் ஆன்டனி சார் ரொம்பவும் முக்கியமான Person
 • அதைத்தான் ஆதி அண்ணண் அன்னைக்கு மேடைல சொன்னாங்க
 • நீங்க நினைக்கிரமாதிரி நான் மொரட்டு சிங்கள்லாம் இல்ல
கதிர் நீங்க ஒரு BCA பட்டதாரி.. உங்களுக்கு எந்த தருணத்தில் சினிமா மேல ஆசை ஏற்பட்டுச்சு...?

நான் BCA தான் படிச்சேன்.. ஆனா எனக்கு Visual Communication தான் படிக்கணும்னு ஆசை, கனவும் கூட. ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து எல்லாமே சினிமா தான், நிறைய சினிமா பார்த்துதான் வளர்ந்தேன். ஆனா அது படிக்கிற அளவுக்கு அப்போ காசு இல்ல, அதனால தான் BCA படிச்சேன். நான் BCA படிச்சாலும் Vis.Com படிக்கிற பசங்ககளோட தான் பழகுவேன். அவன்களும் எனக்கு நிறைய சொல்லி தந்துர்காங்க..

உங்க குடும்பத்துல யாரும் திரைத்துரைல இருக்காங்களா..? உங்க குடும்பத்தை பற்றி கொஞ்சம் சொலுங்களேன்..

குடும்பத்துல யாரும் சினிமால இல்ல.. ஆனா என் குடும்பம் தான் எனக்கு எல்லாம்.. குறிப்பா என்னோட அண்ணா, என்னோட அண்ணா பேரு சம்பத் குமார் அவர் நிறைய பாட்டு, கவிதை அப்புறம் கதையெல்லாம் எழுதுவாரு. எனக்கு நிறைய ஸ்பீச் அப்புறம் கவிதை போட்டிக்கு கவிதைலாம் எழுதி தருவாறு. அவர் தான் என் குரு, அவர் இல்லன நான் இல்ல. கண்டிப்பா அவர் futureல ஒரு இயக்குனரா இல்லனா பாடல் ஆசிரியரா வருவாரு. அப்புறம் என்னோட குடும்பத்துல அப்பா ஷண்முகம், அம்மா பத்மாவதி, அக்கா பரமேஸ்வரி, எங்க மாமா குமார், அவங்களோட பசங்க மதுமிதா and கீர்த்தனா. அப்புறம் அண்ணா சம்பத் அண்ணி திவ்யா அவங்களோட குட்டி பையன் வெற்றி மாறன். 

‘வாய்ப்பு...' மீடியாவை பொறுத்தவரை இது ஒரு மந்திரச்சொல்.. அந்த வாய்ப்பு உங்களுக்கு முதலில் எப்படி கிடைத்தது..?

முதல் வாய்ப்பு வந்து, விஜய் டிவில தான் கிடைச்சுது, என்னோட Class Friend மணிகண்டன் தான் அவனோட நண்பர் சாம்ராஜ்னு ஒரு பையன் விஜய் டிவில கலக்கபோவது யாரு ஜூனியர்ஸ்ல Finals வரைக்கும் போயிருக்கான், அவன போய் பாருன்னு சொன்னான். அப்புறம் நானும் போய் பார்த்தேன், அப்புறம் சாம்ராஜ் தான் என்ன விஜய் டிவிக்கு கூடிட்டு போனாரு. அங்க போனதும் கிங்க்ஸ் of காமெடினு ஒரு நிகழ்சிள கலந்துகிட்டேன், ஆனா அந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு போகல, எங்க டீம் ரிஜெக்ட் ஆகிடுச்சு. அப்புறம் பல முயற்சிகளுக்கு பிறகு 'அது இது எது' நிகழ்ச்சில ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அங்க போறதுக்கு காரணம் வந்து என்னோட நண்பர் விகேன்ஷ் கார்த்தி. அந்த நிகழ்சிக்கு போன பிறகு அங்க சிவகர்த்திகேயன் அன்னவா பார்த்தேன் அவர் அபோதான் படங்கள்ல நடிக்க போனாரு.  அப்புறம் கடைசியா 'காமெடியில் கலக்குவது எப்படி' நிகழ்ச்சில கலந்துக்க வாய்ப்பு கிடைச்சுது, தனசேகர் அப்புறம் நாகராஜ் அந்த ரெண்டு அண்ணா தான் அவங்க டீம்ல என்ன சேத்துக்கிட்டாங்க. ஒரு முப்பது எபிசொட் பண்ணேன் பல முறை Best Performer அவர்ட் வாங்கிர்கேன் சோ இப்படி தான் என்னோட பயணம் ஆரமிச்சுது. 

விஜய் டிவிக்கு போனாலே ஸ்டார் ஆக்கமா திரும்ப அனுப்ப மாட்டாங்கனு சொல்றாங்க.. அப்படி இருக்கப்ப ஏன் அங்க இருந்து விலகினிங்க..?

அது உண்மைதான்.. ஆனா காமெடியில் கலக்குவது எப்படி ஷோ முடிஞ்சுருச்சு, அதுக்கு அப்புறம் ஷோ ஏதும் இல்ல. அபோதான் ஆதித்யா டிவி அசர் அண்ணன் இங்க ஒரு ஷோ இருக்கு, நீ வரியான்னு கேட்டாங்க, நானும் போனேன். அங்க தான் 'காமெடிக்கு நாங்க கோரண்டினு' ஒரு ப்ரோக்ராம் பண்ணேன். அங்க நான் ஒரு ரெண்டு ஷோ தான் பண்ணேன் அதுக்குள்ள எல்லார்க்கும் என்ன புடிச்சுருச்சு. அதுக்கு அப்புறம் என்னோட ஹெட் வசந்த் சார் அப்புறம் தனவிஜயன் சார் இவங்க தான், நான் இப்போ ஆதித்யால இருக்க காரணம். நீ நல்ல பண்ற இங்கயே இரு அப்டினு சொல்லிட்டாங்க. 

ஆதித்யா கதிர் எப்போ யானை ஜோக் கதிரா மாறுனாரு..? யானைக்கும் உங்களுக்கும் அப்படி என்ன ஒரு நட்பு..? 

நான் வந்து ஆரம்பத்துல Record பண்ண ஷோ தான் பண்ணிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நாள் திடீர்னு லைவ் பண்ற வாய்ப்பு கிடைச்சுது. எப்போவுமே லைவ்ல எல்லாரும் Bookல உள்ள ஜோக்ஸ் சொல்லுவாங்க அப்புறம் வேற யாராவது சொன்ன ஜோக் சொல்லுவாங்க. ஆனா எனக்கு மத்தவங்க சொன்ன ஜோக் சொல்ல புடிக்காது. அப்போ ஒரு காலர் டக்குனு ஒரு ஜோக் சொல்ல சொல்லிட்டாரு, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில, என்ன ஜோக் சொல்லலாம்னு யோசிச்சப்ப எனக்கு பிள்ளையார் ரொம்ப புடிக்கும் அப்போ டக்குனு யானையை வச்சு ஒரு ஜோக் சொன்னேன் அவரும் சிரிச்சுட்டு நல்லா இருக்குனு சொன்னாரு. சரி இது நல்லா இருக்குனு சொல்லிட்டு அடுத்த நாள் ரெண்டு யானை ஜோக் சொன்னேன். அப்படியே படி படியா வளந்து 'ஒரு ஜோக் சொல்லாட்டுமான்னு' தனி ப்ரோக்ராமாவே நடந்துச்சு, அதுக்கு குழந்தைகள் மத்தியிலும் பெரியவங்க மத்தியிலும் பெரிய வரவேற்ப்ப எனக்கு கொடுத்துச்சு.

முதல் பட வாய்ப்பு எப்போ கிடைச்சுது..? சினிமாவில் நீங்க முதல்ல பேசுனா வசனம் என்ன..?

என்னோட முதல் பட வாய்ப்பு வந்து "மசாலா படம்".. மிர்ச்சி சிவா மற்றும் பாபி சிம்ஹா அண்ணா அந்த படத்துல நடிச்சாங்க அது தான் என்னோட முதல் படம்.. நான் அந்த படத்துல உதவி இயக்குநரா நடிச்சேன், ஒரு சீன் தான் வருவேன், ஒரு CD கடைல கொஞ்சம் பசங்க நின்னு படம் எப்படி பண்றதுனு பேசிகிட்டு இருப்பாங்க, அப்போ நான் வந்து "இவ்ளோ பேசுறிங்களே, சினிமாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.. சினிமால எத்தனை ஜௌர்னல் இருக்குனு தெரியுமான்னு சொல்லிட்டு ஒரு வசனம் பேசுவேன் அதுக்கு தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. அது தான் என்னோட முதல் வசனம்"  

"அவனுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கு.. கண்டிப்பா கதிர் நல்லா வருவான்" இது நான் சிரித்தால் வெற்றி மேடையில ஆதி உங்களை பற்றி சொன்னது.. இதை பற்றி உங்கள் கருத்து..

மூணு வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு ஹிப் ஹாப் ஆதி அண்ணாவை தெரியும், அப்போவே அதி அண்ணா, நம்ம கண்டிப்பா படம் பன்றோம்னு சொன்னாங்க. மீசையை முறுக்கு படத்துலே நான் நடிக்கவேண்டியது ஆனா முடியல. அதுக்கு அப்புறம் நட்பே துணை படத்துலயும் ட்ரை பண்ணோம் ஆனா அதுலயும் முடியல. அப்புறம் நான் சிரித்தால் படம் பண்றப்ப ஆதி அன்னான் கேட்டாங்க, ஒரு சீன் தான் கதிர் பன்றியான்னு, நானும் கண்டிப்பா பண்றேன்னு சொல்லி பண்ணேன். உண்மையாவே அந்த ரெண்டு படத்துல நடிச்சுருந்தா கூட இந்த அளவுக்கு பேர் கிடைச்சுரக்குமான்னு தெரியல, அந்த ஒரு சீன் நடிச்சதுக்கு நிறைய பேரு என்ன பாராட்டுனாங்க. என்ன மாதிரி ஜெயிக்கணும்னு ஓடுற பசங்களுக்கு இது ஒரு உற்சாகத்தை தருது. இனிமே இவனுக்கு ஒரு சீன் என்ன 100சீன் கூட தரலாம்னு எல்லாரையும் நம்ம வச்சுச்சு அந்த சீன். அதைத்தான் ஆதி அண்ணண் அன்னைக்கு மேடைல சொன்னாங்க. 

அடுத்து என்ன என்ன படங்கள் நடிச்சுட்டு இருக்கீங்க..?

அடுத்து வந்து விஜய் ஆன்டனி சார் கூட தமிழரசனு ஒரு படம் பண்றேன், யோகி பாபு அண்ணாவும் நானும் காமெடியான பன்றோம். எனக்கு விஜய் ஆன்டனி சார் ரொம்பவும் முக்கியமான Person. ஏன்னா என்ன டிவில பாத்துட்டு என்ன நடிக்கிறிங்களானு கேட்டாரு. அப்புறம் உடனே கூட்டிட்டுபோய் 'திமிர் பிடித்தவன்' அப்டினு ஒரு படத்துல நடிக்க வச்சாரு. அது மட்டும் இல்ல அவர் என்னோட அண்ணன் மாதிரி. ஒரு நிகழ்ச்சியில பேசுறப்ப கதிர் இன்னும் ஒரு 5 படம் பண்ண கண்டிப்பா யோகி பாபு மாதிரி வந்துருவாருனு சொன்னாரு, அதுமட்டும் இல்லாம அந்த 5 படமும் நானே அவருக்கு தருவேன்னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே அவரோட எல்லா படங்களையும் என்ன பயன்படுத்துறாரு, கண்டிப்பா அவருக்கு எப்போவும் நான் நன்றியோட இருப்பேன். 

அடுத்ததா அட்ட கத்தி தினேஷ் அண்ணா கூட 'நானும் சிங்கள் தான்' அப்டின்னு ஒரு படம் பண்றேன் அதுலயும் முழுக்க காமெடி தான், அந்த படத்துக்காக என்ன லண்டன்லாம் கூட்டிட்டு போனாங்க. அப்புறம் ஜெயம் ரவி அண்ணா கூட பூமி அப்டின்னு ஒரு படம் பண்றேன். அது ரவி அண்ணனுக்கு 25-வது, எனக்கும் அது தான் 25-வது படம் , ஆனா அது யாருக்கும் தெரியாது. அந்த படத்துல அவரோட நண்பரா நடிசுருக்கேன். படத்துல நடிகிரப்ப ஜெயன் ரவி அண்ணன் நிறைய சொல்லிக்குடுத்தாங்க. அப்புறம் ‘டைம் இல்ல' அப்டின்னு ஒரு படம் பண்றேன். அப்புறம் PUBG அப்டின்னு ஒரு படம் நடிச்சுட்டு இருக்கேன். 

நம்பவே முடியல அதுக்குள்ள 25 படம் நடிச்சுடிங்க.. அப்போ அடுத்து ஹீரோவா எப்போ நடிக்க போறீங்க..?

எனக்கும் ஆசை தான், என்னையும் ஹீரோவா வச்சு ஒரு டைரக்டர் படம் பண்ண Readyஆ இருந்தா, நல்ல கதை கிடைச்ச கண்டிப்பா நான் ஹீரோவா நடிப்பேன். காலம் தான் பதில் சொல்லணும்,...

சரி கடைசி கேள்வி... நீங்க மொரட்டு சிங்கிள்ளா..? இல்ல கமிட்டடா..? இல்ல கல்யாணமே ஆயிடுச்சா..?
 
நீங்க நினைக்கிரமாதிரி நான் மொரட்டு சிங்கள்லாம் இல்ல... மொரட்டு மொரட்டு சிங்கள், ஏன்னா நமக்கு First Love சினிமா தான். சினிமா கூடவே நிறைய டைம் செலவு செய்றதுனால லவ் பண்ண டைம் இல்ல. அப்டியே போரபோக்குல கடவுளா பத்து மின்கிள் பண்ணா பாக்கலாம்...

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com