முகப்புகோலிவுட்

பிரபல செய்திதொடர்பாளரின் தாயார் மரணம்! நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்!

  | August 27, 2019 12:20 IST
Suresh Chandra

துனுக்குகள்

  • அஜித் சுரேஷ் சந்திராவின் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்
  • பிரபலங்கள் பலரும் இவருக்கு அஞ்சல் செலுத்தி வருகிறார்கள்
  • இன்று அதிகாலை சுரேஷ் சந்திராவின் தாயார் காலமானார்
நடிகர் அஜித் குமாரின் நீண்ட நாள் மேனேஜரும், சில முன்னணி நடிகர்களுக்கு பிஆர்ஓவாகவும் இருக்கின்ற சுரேஷ் சந்திராவின் தாயார் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை காலமானார். இச்செய்தியை அறிந்த அஜித், உடனடியாக சுரேஷ் சந்திராவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கோலிவுட்டை சேர்ந்த திரைபிரபலங்கள் சுரேஷ் சந்திராவிற்கு போன் மூலமாகவே நேரில் சென்றும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
 
அஜித்துடனான சுரேஷ் சந்திராவின் நட்பு என்பது நீண்ட நாள் பயணம். சினிமாதுறையில் அஜித்தின் பயணம் தொடங்கிய போதிலிருந்து சுரேஷ் சந்திரா உடன் இருந்து வருகிறார். அஜித் ரசிகர் மன்ற தலைவராக இருந்து பின் மன்றங்கள் கலைக்கப்பட்ட பிறகு அஜித்திற்கு மேனேஜராகவும், செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அஜித் மட்டும் இல்லாமல் பல்வேறு நடிகர்களின் உற்ற நண்பனாகவும், செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் இறந்த செய்து திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்