முகப்புகோலிவுட்

"சத்தியத்தின் நையாண்டியான பயணம்" - பிரேம்ஜியின் நடிப்பில் 'சத்திய சோதனை'..!!

  | July 23, 2020 08:00 IST
Sathiya Sothanai

துனுக்குகள்

 • ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டனிடம் உதவியாளராக பணிபுரிந்த
 • பிரபல நடிகை ரேஷ்மா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்று
 • பிரபல நடிகர் மாதவன் இந்த போஸ்ட்டரை தனது ட்விட்டர் பக்கத்தில்
‘காக்கா முட்டை' திரைப்படத்தை இயக்கிய மணிகண்டனிடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கி கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு'.  இந்த திரைப்படம் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளையும், பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சுரேஷ் சங்கையா தற்போது பிரபல நடிகர் பிரேம்ஜி அவர்களை கொண்டு புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்க  உள்ளார்.

பிரபல நடிகை ரேஷ்மா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கையா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை சமீர் பரத் ராம் என்பவர் தயாரித்துள்ளார். 'சத்திய சோதனை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு - 'A  Satirical Journey of Truth' என்ற caption உள்ளதால் இந்த படம் நிச்சயம் நகைச்சுவை சார்ந்த சமுதாய திரைப்படமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. 

தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது, பிரபல நடிகர் மாதவன் இந்த போஸ்ட்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com